எங்களை பற்றி

 கொடைக்கானல் நகர செஸ் விளையாட்டு வீரர்களே..

கொடைக்கானல் நகரில் செஸ் விளையாட விரும்பும் அன்பர்களுக்காக தொடங்கப்பட்டதே இந்த வலைத்தளம். கொடைக்கானலில் ஆங்காங்கே தனித்திருக்கும் செஸ் விளையாட்டு வீரர்களை ஒன்றிணைப்பதே இந்த வலைதளத்தின் நோக்கம்.

கொடைக்கானலில் இருக்கும் செஸ் வீரர்களை ஒன்றிணைத்து அவ்வப்போது அவர்களுக்குள் சாம்பியன்ஷிப் போட்டியினை ( TOURNAMENT ) வைப்பதே எதிர்கால நோக்கம்.

அதோடு செஸ் விளையாட்டின் நுணுக்கங்களை கற்றுக்கொள்ள பயிற்சி வகுப்புகள் வைப்பது..புதிதாக கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கு விளையாட்டின் அடிப்படையை கற்றுக்கொடுப்பது போன்ற செஸ் சம்பந்தமான எல்லா விஷயங்களையும் ஒருங்கே இணைக்கவே இந்த கொடைக்கானல் செஸ் கிளப் .

ஆர்வம் உள்ள எல்லோரையும் அன்புடன் வரவேற்கிறோம்.